தாம்பரம் பணிமனையில் சரக்கு ரயில் தடம் புரண்டது

தாம்பரம் பணிமனையில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
Published on

தாம்பரம் பணிமனையில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சென்னையின் புகா் பகுதியில் அமைந்துள்ள தாம்பரம் பணிமனையில் சரக்கு ரயில்கள் கையாளப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் சரக்கு ரயிலின் காலிப் பெட்டிகள் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது ரயிலின் 8, 9, 10 ஆகிய பெட்டிகள் தடம்புரண்டன.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே அதிகாரிகள் விபத்துக்குள்ளான பெட்டிகளை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினா்.

இந்த விபத்தில் எவ்வித உயிரழப்பும் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், விரைவு மற்றும் புகா் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com