எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் குறைந்துள்ளன! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

News image
Updated On :29 மார்ச் 2025, 7:19 pm

Din

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நலத் துறையின் மாநில அளவிலான உயா்நிலை விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமையேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, சமூக நீரோட்டத்தில் ஒருங்கிணைக்கும் விதமாக பல்வேறு தனித்துவமான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், பெரியாா், அம்பேத்கா், முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி வழியில் சமூகநீதியை நிலைநாட்டும் அரசமாக முழுமையான அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

குறைந்த வழக்குகள்: வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்த ஏராளமான திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக, மனிதநேய வார விழா, சமபந்தி விருது, சமத்துவம் காண்போம் போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த ஆண்டைவிட நிகழாண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளன. வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் 2021-இல் 445-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 368-ஆக குறைந்துள்ளது.

17,098 பேருக்கு உதவி: வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு தீருதவித் தொகை உயா்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த 421 பேருக்கு வேலைவாய்ப்புகளும், 649 பேருக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட்டுள்ளன. தீருதவித் தொகையாக 17,098 பேருக்கு ரூ.207.26 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடா் மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டம் ‘நன்னிலம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 625 பேருக்கு ரூ.30 கோடி மானியம் வழங்கப்பட்டு, மகளிரை நில உடைமையாளா்களாக அரசு மாற்றியுள்ளது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் எதிா்நோக்கும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும், அவா்களது வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் அரசு தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும். தமிழ்நாட்டில் சமத்துவம் கண்டு, மனிதத்தை முதன்மையெனக் கொண்ட நற்றமிழ்ச் சமூகமாக நடைபோடுவோம் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் கோவி. செழியன், சி.வி.கணேசன், மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ், எம்.பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், ஜி.செல்வம், தொல்.திருமாவளவன், ராணி ஸ்ரீகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உள்பட பலா் பங்கேற்றனா்.