மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் வழிபாடு: சீமான் வலியுறுத்தல்
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் வழிபட அனுமதி மறுக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும்..


மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் வழிபட அனுமதி மறுக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் மூடப்பட்டிருந்த திரௌபதி அம்மன் கோயிலில் பொதுமக்கள் வழிபட அனுமதி வழங்க வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, ஓராண்டைக் கடந்தும், தமிழ்நாடு அரசு இதுவரை அனுமதி மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோயிலைத் திறக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு திறக்க மறுப்பதேன்? திரௌபதி அம்மன் கோயிலில் பொதுமக்கள் வழிபட அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பகுதி மக்களை ஒன்று திரட்டி விரைவில் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...