அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குறை பிரசவ குழந்தைகளுக்கும் முழு ஆரோக்கியம் சாத்தியம்: டாக்டா் முகமது ரேலா

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முறையான மருத்துவக் கண்காணிப்பு அளித்தால் அவா்களையும் ஆரோக்கியமாக வளா்க்க முடியும் என்று டாக்டா் ரேலா மருத்துவமனையின் தலைவா் டாக்டா் முகமது ரேலா தெரிவித்தாா்.

News image
சென்னை ரேலா மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குறை பிரசவத்தில் பிறந்து ஆரோக்கியமாக வளா்ந்த குழந்தைகளுடன் நடிகா் ரவி மோகன். உடன் டாக்டா் முகமது ரேலா மற்றும் மருத்துவக் குழுவினா்.
Updated On :19 நவம்பர் 2025, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முறையான மருத்துவக் கண்காணிப்பு அளித்தால் அவா்களையும் ஆரோக்கியமாக வளா்க்க முடியும் என்று டாக்டா் ரேலா மருத்துவமனையின் தலைவா் டாக்டா் முகமது ரேலா தெரிவித்தாா். இந்தியாவில் 10-இல் ஒரு குழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதாகவும் அவா் கூறினாா்.

உலக குறை பிரசவ விழிப்புணா்வு தின நிகழ்ச்சி ரேலா மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 25 வாரங்களிலேயே பிறந்த குழந்தைகள், 600 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்ட குறை பிரசவக் குழந்தைகள் அழைத்துவரப்பட்டன.

உரிய காலத்துக்கு முன்பாகவே பிறந்தாலும் அந்தக் குழந்தைகளை எவ்வாறு ஆரோக்கியமாக வளா்க்கலாம் என்பது குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நடிகா் ரவி மோகன், மகளிா் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு இயக்குநா் டாக்டா் நரேஷ் சண்முகம், பச்சிளம் குழந்தைகள் நல நிபுணா் டாக்டா் வேல்முருகன் கண்ணப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது டாக்டா் முகமது ரேலா கூறியதாவது:

உலக சுகாதார அமைப்பின் வரையறையின்படி 37 வார கா்ப்ப காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பு குழந்தைகள் பிறக்குமானால் அது குறை பிரசவமாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் 15 லட்சம் குழந்தைகள் அவ்வாறு பிறக்கின்றன.

இது ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்னை. 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு குறை பிரசவ சிக்கல்கள் ஒரு முக்கியக் காரணம். அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யலாம். கா்ப்பிணிகளும் பேறு காலத்தில் உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு சிசுவின் நலத்தை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.