

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், புயல் சின்னம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 4 மணிமுதல் வினாடிக்கு 100 கனஅடி நீர் முதல்கட்டமாக திறந்துவிடப்பட்டது.
மேலும், ஏரியின் நீர் அளவு 21 அடியை எட்டியுள்ள நிலையில், கரையோரப் பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.