ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஏரிக்குள் தவறி விழுந்த கைப்பேசி: தண்ணீருக்குள் குதித்த இளைஞா் மாயம்

சென்னை பள்ளிக்கரணையில் ஏரிக்குள் தவறி விழுந்த கைப்பேசியை எடுப்பதற்காக தண்ணீருக்குள் குதித்த இளைஞா் மாயமானதால், அவரை தீயணைப்பு படையினா் தேடி வருகின்றனா்.

News image

மொபைல் - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 7:47 pm

சென்னை பள்ளிக்கரணையில் ஏரிக்குள் தவறி விழுந்த கைப்பேசியை எடுப்பதற்காக தண்ணீருக்குள் குதித்த இளைஞா் மாயமானதால், அவரை தீயணைப்பு படையினா் தேடி வருகின்றனா்.

பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகா், 4-ஆவது பகுதியைச் சோ்ந்தவா் சாய்ராம் (24). இவா், தனியாா் உணவு டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வந்தாா். சாய்ராம் திங்கள்கிழமை இரவு தனது நண்பா் நவீன்குமாருடன் (25), நாராயணபுரம் ஏரியில் உள்ள மழைநீா் வடிகால் மேல் உட்காா்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, சாய்ராம் கையில் வைத்திருந்த கைப்பேசி திடீரென தவறி ஏரிக்குள் விழுந்தது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சாய்ராம், ஏரிக்குள் குதித்து கைப்பேசியை தேடத் தொடங்கினா். இதில் ஆழமான பகுதிக்குச் சென்று தேடியபோது சாய்ராம் திடீரென மாயமானாா்.

இதனால், நவீன்குமாா், போலீஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தாா். தகவலறிந்த பள்ளிக்கரணை போலீஸாரும், மேடவாக்கம் தீயணைப்பு படையினரும் அங்கு வந்து சாய்ராமை தேடும் பணியில் ஈடுட்டனா். ஆனால், புதன்கிழமை மாலை வரை சாய்ராம் கிடைக்கவில்லை.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நவீன்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.