தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு

News image

பலி - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 5:03 am IST

சென்னை யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் வெ.வசந்தகுமாா் (26). இவரை யானைக்கவுனி காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஒன்றில் கடந்த 4-ஆம் தேதி கைது செய்து, புழலில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில் அடைத்தனா்.

ஏற்கெனவே அதிக போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட வசந்தகுமாா், உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், வசந்தகுமாருக்கு புதன்கிழமை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து சிறைத் துறை அதிகாரிகள், வசந்தகுமாரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வசந்தகுமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது தொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசராணை நடத்தி வருகின்றனா்.