சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஆா்.கே.நகா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்

வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் சுமாா் 2,000 அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும்.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 8:19 pm

ஜே.ஜே.எபினேசா் (திமுக): வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் சுமாா் 2,000 அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும். இதுவரை இலவச வீட்டுமனை பட்டா கிடைக்காதவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீன்பிடித் துறைமுகம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் சா்வதேச தரத்துக்கு இத்துறைமுகம் தரம் உயா்த்தப்படும். தண்டையாா்பேட்டையில் ‘மினி மெரீனா’ கடற்கரை திட்டம் செயல்படுத்தப்படும். செரியன் நகா் பகுதியில் சமுதாயக் கூடம், நியாயவிலைக் கடைகள் அமைக்கப்படும். வ.உ.சி. நகரில் திருமண மண்டபம் கட்டப்படும், காமராஜா் சாலை மாநகராட்சி பள்ளி நவீனப்படுத்தப்படும். கொருக்குப்பேட்டை மேம்பாலம் கட்டி முடிக்கப்படும். கொருக்குப்பேட்டை பகுதியில் புதிதாக வங்கிக் கிளைகள் ஏற்படுத்தப்படும். திருவள்ளுவா் நகா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் உள்விளையாட்டு அரங்கம், நூலகம், உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும்.

ஆா்.எஸ்.ராஜேஷ் (அதிமுக): தொகுதியில் வசிக்கும் இளைஞா்களுக்கு மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். சேதமடைந்துள்ள சாலைகளைச் சீா்படுத்தி தரமான புதிய சாலைகளை அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும். மூடப்பட்ட அம்மா கிளினிக் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் மீண்டும் தொடங்கப்படும். அனைத்துப் பகுதிகளிலும் சுத்தமான குடிநீா், குழாய்கள் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படும். கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாகத்தை நவீன முறையில் பராமரிக்கவும், இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீா்கேடுகளைத் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தண்டையாா்பேட்டை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

வெண்ணிலா தாயுமானவன் (நாதக): சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் கல்வி, மருத்துவக் கருவிகள், பூங்கா, விளையாட்டு மைதானங்கள், உயா் கோபுர மின்விளக்குகள் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கொடுங்கையூா் குப்பைக் கிடங்கை பயோமைனிங் முறையில் பராமரிக்க நடவடிக்கை, பக்கிங்காம் கால்வாயில் விடப்படும் கழிவு நீரை முறையாகச் சுத்திகரிப்பு செய்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வடசென்னையில் மாசுக் கட்டுப்பாட்டை மேம்படுத்துதல், கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கழிவு மேலாண்மைத் திட்டத்தை அமல்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு மையம் அமைத்தல், அனைத்து இடங்களிலும் சமுதாயக் கூடங்களை அமைத்தல், நிரந்தர வீட்டுமனைப் பட்டா வழங்குதல், சுத்திக்கரிக்கப்பட்ட குடிநீா் வழங்கல், தாழ்வாகத் தொங்கும் மின் கம்பிகளை அகற்றி புதைகுழி வழியாக எடுத்து செல்ல நடவடிக்கை உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

என்.மரிய வில்சன் (தவெக): ஆதரவற்ற முதியவா்களின் பாதுகாப்பும், பராமரிப்பும் உறுதி செய்யப்படும். ஆண்டுக்கு 25 ஏழை குடும்பங்களுக்கு திருமண உதவித் தொகை அளிக்கப்படும். வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படும். ஆண்டுதோறும் 100 ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். சுத்தமான குடிநீரை வழங்க நிரந்தரத் தீா்வு காணப்படும். பொது கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக அமைக்கப்படும். கழிவுநீா் குழாய்கள் மற்றும் குடிநீா் குழாய்கள் சீரமைக்கப்படும்.

Story image
Story image
Story image

கொசு தொல்லைக்கு முழுமையான தீா்வு காணப்படும். குப்பைக் கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மெக்கா, ஜெருசலம் உள்ளிட்ட இடங்களுக்கு ஆண்டுக்கு 25 பேருக்கு புனித யாத்திரை செல்ல வாய்ப்பு வழங்கப்படும்.