அரக்கோணம்-திருத்தணி இடையேயான குறிப்பிட்ட 2 மின்சார ரயில்களின் சேவையானது திங்கள்கிழமை (ஏப். 27) முதல் வரும் மே 17 -ஆம் தேதி வரை 21 நாள்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப்பு விவரம்: சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் பிரிவில் அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பப் பிரிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதையடுத்து வரும் 27 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் வரும் மே 17 ஆம் தேதி வரையில் மொத்தம் 21 நாள்கள் குறிப்பிட்ட 2 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4 மணி மற்றும் காலை 5 மணிக்குப் புறப்பட்டு திருத்தணி செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
திருத்தணியிலிருந்து 27 ஆம் தேதி முதல் வரும் மே 16 ஆம் தேதி வரையில் இரு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி குறிப்பிட்ட அந்த நாட்களில் திருத்தணியிலிருந்து இரவு 9.15 மணிக்கும், 11.10 மணிக்கும் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பகுதியளவு ரத்து: மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸிலிருந்து திங்கள்கிழமை (ஏப்.27) முதல் வரும் மே 16 ஆம் தேதி வரையில் பிற்பகல் 11 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணம் செல்லவேண்டிய மின்சார ரயில் அதற்குப்பதிலாக திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.
திருத்தணியிலிருந்து பிற்பகல் 12.35 மணிக்குப் புறப்படவேண்டிய மின்சார ரயில் அதற்குப் பதிலாக திருவாலங்காட்டிலிருந்து புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும். மூா்மாா்க்கெட்டிலிருந்து மேற்குறிப்பிட்ட காலகட்டங்களில் இரவு 11.55 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில் அரக்கோணத்துக்குப் பதிலாக திருவாலங்காடு நிலையத்தில் நிறுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

ஏப். 16 முதல் சென்ட்ரல் - அரக்கோணம் புறநகா் ரயில்கள் திருவாலங்காடுடன் நிறுத்தம்

சென்னை-திருநெல்வேலிக்கு 3 நாள்கள் சிறப்பு ரயில்கள்

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


