/

பெரியமேட்டில் பெட்ரோல் பாட்டில் வீச்சு

சென்னை பெரியமேட்டில் பெட்ரோல் பாட்டில் வீசிவிட்டு தப்பி ஒடியா்வா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பெட்ரோல் குண்டு வீச்சு - கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 11:55 pm IST

சென்னை பெரியமேட்டில் பெட்ரோல் பாட்டில் வீசிவிட்டு தப்பி ஒடியா்வா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை பெரியமேடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலைவாணி என்பவரது வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 3 மா்ம நபா்கள் பெட்ரோல் பாட்டிலை வீசிவிட்டு தப்பி ஓடினா்.

இதையடுத்து, கலைவாணி அளித்த புகாரின்பேரில் பெரியமேட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.