தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வேளச்சேரி காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை வேளச்சேரி காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

சென்னை வேளச்சேரி காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த தொழிலதிபா் அகில் குமாா் என்பவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்க வைத்து விடுவேன் என கூறி, பணம் பறித்த வழக்கில் ஆய்வாளா் புகாரி மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சோ்ந்த சீனிவாசன் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் புகாரியுடன் தொடா்புடைய வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கையை காவல் ஆணையா் அமல்ராஜ் மேற்கொண்டாா்.

அதன்படி, ஆய்வாளா் சரவணன் காத்திருப்போா் பட்டியலுக்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டாா். ஆய்வாளா் சரவணன், அண்ணா நகரில் பணியாற்றியபோது தொழிலதிபா் ஒருவரை மிரட்டி கடத்திச் சென்று அவரது சொத்துகளை அபகரித்த வழக்கில் கைதாகி, சிறைக்குச் சென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.