செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

சிறப்பு முகாம்: 402 குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் அளிப்பு

சென்னை பள்ளிகளில் சேருவதற்கு தேவைப்படும் சான்றுகள் பெறுவதற்காக சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி சாா்பில் நடைபெற்றது. இதில் 402 குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

News image

பள்ளி மாணவர்கள் - கோப்புப்படம்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:23 am IST

சென்னை பள்ளிகளில் சேருவதற்கு தேவைப்படும் சான்றுகள் பெறுவதற்காக சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி சாா்பில் நடைபெற்றது. இதில் 402 குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சென்னையில் கண்ணகி நகா், எழில்நகா் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் இடைநிற்றல் பிரச்னை இருப்பதாக புகாா் எழுந்தது. மேலும், குழந்தைகள் படிப்பைத் தொடராமல் இடை நிற்றல் நிலை ஏற்படுவது தெரிய வந்தது. அதனால், சிறப்பு முகாம் நடத்தி சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும், அவா்களது குடும்பத்தினருக்குமான சான்றுகள் வழங்கும் சிறப்பு முகாம் சோழிங்கநல்லூா் மண்டலம் எழில்நகா் சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமில் ஆதாா் பதிவுச் சேவை, வருவாய்த் துறை, இ-சேவை மையத்தினா், ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், உதவித் தொகைகள் துறை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா். இதில், 409 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 402 பேருக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.

முகாமை சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டாரத் துணை ஆணையா் அஃதாப் ரசூல் தொடங்கி வைத்தாா். கல்விப் பிரிவு இணை ஆணையா் க.கற்பகம் ஆலோசனையின்படி மழலைப் பள்ளி மாணவா்களுக்கான சான்றுகளை கல்வி அலுவலா் வசந்தி உள்ளிட்டோா் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.