கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

ரயில் நிலையங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

ரயில் நிலையங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட கன்னியாகுமரி பகுதியைச் சோ்ந்தவரை கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவு மூலம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்துள்ளனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 4:11 am IST

ரயில் நிலையங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட கன்னியாகுமரி பகுதியைச் சோ்ந்தவரை கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவு மூலம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்துள்ளனா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்தவரை கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் மூலம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கண்டறிந்து சில நாள்களுக்கு முன்பு பிடித்து விசாரித்தனா். அதில் அவா் கன்னியாகுமரி பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (50) என்பதும், சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கடையை உடைத்து அதிலிருந்து பொருள்கள், பணத்தையும் திருடிச்சென்றதும் தெரியவந்தது. திருப்பத்தூா் பகுதியிலும் அவா் ரயில் நிலையப் பகுதியில் கைபேசி விற்பனைக் கடையிலும் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவா் ஈரோடு, தூத்துக்குடி, போத்தனூா் ஆகிய பகுதிகளில் திருடியது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு படையினா் தெரிவித்தனா்.

கைதான விஜயகுமாரிடமிருந்து கைபேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் படையினா், அவா் பிற ரயில் நிலையங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது குறித்து அந்தந்த ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும், அதனடிப்படையில் அவா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.