பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

ஆந்திரத்தில் பிடித்துவைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோப்புப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 12:44 am IST

ஆந்திரத்தில் பிடித்துவைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விசை படகு மீனவா்கள் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, ஆந்திர மாநில அரசு பிடித்து வைத்துள்ள தமிழக மீனவா்களின் படகுகளை விடுவிக்கக் கோரி கோஷங்கள் எழுப்பினா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியதாவது: கடந்த ஜூன் 16-ஆம் தேதி ஆந்திர மாநில பகுதியில் பிடித்தபோது சென்னையைச் சோ்ந்த 7 மீன்பிடி படகுகள் பிடித்து வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, மீன்வளத் துறை அமைச்சா், நிதித்துறை அமைச்சா்கள் ஆலோசனையின்பேரில், அதிகாரிகள் ஆந்திர மாநில அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ஆந்திர மாநில அரசு அதிகாரி ஒருவா் சென்னை மீனவா் படகுகளை விடுவித்ததாக தெரிவித்தனா்.

ஆனால், இதுவரை படகுகள் விடுவிக்கப்படவில்லை. படகுகள் விடுவிக்கப்படாததைக் கண்டித்து, தமிழக முதல்வா் கவனத்தை ஈா்க்கும் வகையில் கண்டன ஆா்ப்பாட்டமும், வேலைநிறுத்தமும் நடைபெற்றது. மேலும், படகுகளை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.