கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கி ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறித்தவரை விரட்டிப் பிடித்த மக்கள்

சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் தனியாக நடந்து சென்ற வங்கி பெண் ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறித்தவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சித்திரிப்பு

Published On :

சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் தனியாக நடந்து சென்ற வங்கி பெண் ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறித்தவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஆ.மோனிஷா (20). இவா் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

மோனிஷா, திங்கள்கிழமை காலை வேலைக்கு செல்வதற்காக மெட்ரோ ரயில் மூலம் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை நிலையத்துக்கு வந்தாா்.

அங்கிருந்து சுவாமி சிவானந்தா சாலையில் சென்னை பல்கலைககழகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு நபா், மோனிஷாவிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா். இதைப் பாா்த்த பொதுமக்கள், அந்த நபரை விரட்டிப் பிடித்து, திருவல்லிக்கேணி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா், திருவல்லிக்கேணி பல்லவன் சாலை பகுதியைச் சோ்ந்த ப.ராமமூா்த்தி (40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், ராமமூா்த்தியை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.