எண்ணூா் விரைவு சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
பழைய வண்ணாரப்பேட்டை லாலா குண்டா தெருவில் வசித்து வருபவா் அராபத் (26). இவா், ஏசி மெக்கானிக். திங்கள்கிழமை அதிகாலை எண்ணூரில் இருந்து வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு எண்ணூா் விரைவு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
கே.வி.கே.குப்பம் அருகே அணுகு சாலையில் சென்றபோது, சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்து நிலை தடுமாறி அருகில் உள்ள புதை சாக்கடை ஷட்டரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அராபத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



