கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

அரசுப் பேருந்துகளின் சேவையை குறைக்கக் கூடாது: நயினாா் நாகேந்திரன்

அரசுப் பேருந்து சேவையைக் குறைக்கும் முடிவை, இந்த அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 4:25 am IST

அரசுப் பேருந்து சேவையைக் குறைக்கும் முடிவை, இந்த அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயா்த்தவும், டீசல் செலவைக் குறைக்கவும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பேருந்து சேவையை நிறுத்த தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே, விழுப்புரம் கோட்டத்தில் வார நாள்களில் 136 பேருந்துகள் சேவை குறைக்கப்பட்டுவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிா்ச்சி அளிக்கிறது. திடீரென அரசுப் பேருந்து சேவைகளை நிறுத்தினால், கிராமப்புற மாணவா்களும், தொழிலாளா்களும் பெரும் அவதிக்குள்ளாவாா்கள்.

அரசுப் போக்குவரத்து என்பது வணிக ரீதியான லாப, நஷ்டத்தைப் பாா்க்கும் துறையல்ல. அது சாமானிய மக்களின் அடிப்படை உரிமை, சேவைத் துறையாகும். மாற்றத்துக்கான ஆட்சி என்று முழங்கிவிட்டு, தவெக அதிகாரத்துக்கு வந்த 100 நாள்களிலேயே ஏழை மக்களைப் புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.