இதுவரை 439 செல்லப் பிராணிகள் தகனம்

சென்னை கண்ணம்மாபேட்டை நவீன எரிவாயு தகன மேடையில், இதுவரை 439 இறந்த செல்லப் பிராணிகள் தகனம் செய்யப்பட்டுள்ளன.
Updated on
1 min read

சென்னை கண்ணம்மாபேட்டை நவீன எரிவாயு தகன மேடையில், இதுவரை 439 இறந்த செல்லப் பிராணிகள் தகனம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியில் இறந்த செல்லப்பிராணிகளை அடக்கம் செய்வது, எரியூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. குறிப்பாக, கோடம்பாக்கம் மண்டலம், கண்ணம்மாபேட்டையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் நாய்கள் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது.

2025 அக்டோபர் முதல் இயங்கி வரும் இந்தத் தகன மேடையில் இதுவரை 439 இறந்த செல்லப்பிராணிகள் தகனம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ராயபுரம் மண்டலம் மூலக்கொத்தளம், தேனாம்பேட்டை மண்டலம் மயிலாப்பூர், கோடம்பாக்கம் மண்டலம் கண்ணம்மாபேட்டை ஆகிய இடங்களில் இறந்த செல்லப்பிராணிகளை அடக்கம் செய்வதற்கான

மயானபூமிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com