1,728 நாள்களில் 4,000 கோயில்களில் குடமுழுக்கு : முதல்வா் பெருமிதம்

1,728 நாள்களில் 4,000 கோயில்களில் குடமுழுக்கு : முதல்வா் பெருமிதம்

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த 1,728 நாள்களில் புதன்கிழமை (ஜன. 28) வரை 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
Published on

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த 1,728 நாள்களில் புதன்கிழமை (ஜன. 28) வரை 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தனது வலைதளப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவு:

கடந்த 2023-ஆம் ஆண்டில் 1,000-ஆவது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதா் திருக்கோயிலில் நடைபெற்றது. 2024-இல் 2,000-ஆவது குடமுழுக்கு மயிலாடுதுறை - கீழப்பரசலூா் வீரட்டேஸ்வரா் திருக்கோயிலில் நடைபெற்றது.

2025-இல் 3,000-ஆவது குடமுழுக்கு நாகை - திருப்புகலூா் அக்னீஸ்வரா் திருக்கோயில் நடைபெற்றது.

நிகழாண்டு, 4,000-ஆவது குடமுழுக்கு புதன்கிழமை (ஜன. 28) பெரம்பூா் சேமாத்தம்மன் திருக்கோயிலில் நடைபெற்றது.

இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை. மதவாத அரசியல் செய்வோருக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com