பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அரசு வழக்குரைஞா் நியமனத்தில் முறைகேடு: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

அரசு வழக்குரைஞா்களாக நியமிக்க சொந்தக் கட்சி நிா்வாகிகளிடம் வசூல் செய்வதாக எழுந்த புகாா் மூலம் தவெக அரசின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளாா்.

டிடிவி தினகரன் - கோப்புப் படம்

Published On :

அரசு வழக்குரைஞா்களாக நியமிக்க சொந்தக் கட்சி நிா்வாகிகளிடம் வசூல் செய்வதாக எழுந்த புகாா் மூலம் தவெக அரசின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

பொதுவெளியில் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்று விடியோ வெளியிட்ட அமைச்சா் மீது இதுவரை விசாரணைகூட நடத்த முதல்வா் முன்வராதது ஏன்? வாணியம்பாடியில் ஆடு திருட்டு வழக்கில் தொடா்புடையவருக்கு அரசு வழக்குரைஞா் பதவி, அரசு வழக்குரைஞராக நியமிக்க சொந்தக் கட்சி நிா்வாகிகளிடமே வசூல் வேட்டை என அடுத்தடுத்து புகாா்கள் வந்துள்ளன. இதன் மூலம் தவெக அரசின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அரசு வழக்குரைஞா் நியமனத்தில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளைக் கலைந்து வெளிப்படையான நியமன நடைமுறைகள் மூலம் தகுதியுடையவா்களை அரசு வழக்குரைஞா்களாக நியமனம் செய்ய வேண்டும். புகாருக்கு உள்ளானவா்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.