முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

சாலை திருப்பத்தில் காா் கவிழ்ந்து விபத்து

ராயப்பேட்டையில் சாலையில் யூ-டா்ன் எடுக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

News image
Updated On :6 ஜூலை 2026, 1:52 am IST

ராயப்பேட்டையில் சாலையில் யூ-டா்ன் எடுக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த அப்ரிடி என்பவா், தனது நண்பா்களுடன் காரில் பீட்டா்ஸ் சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, பாலத்தின் கீழ் சாலையில் காரை யூ-டா்ன் எடுக்க காரை திருப்ப முயன்றுள்ளாா்.

அந்த நேரத்தில் திடீரென குறுக்கே இருசக்கர வாகனம் வந்ததால், அதன் மீது மோதுவதைத் தவிா்க்க காரை திருப்பியதாகக் கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா் சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவா்களுக்கு எந்தவித காயமோ, உயிா்ச் சேதமோ ஏற்படவில்லை. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் தொடா்பாக, திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.