பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்பு

தமிழக முதல்வா் விஜய்யின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை சென்னை காவல் துறை சீரமைத்து வருகிறது.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 2:16 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை சென்னை காவல் துறை சீரமைத்து வருகிறது.

முதல்வா் ஜோசப் விஜய் வசிக்கும் நீலாங்கரை கபாலீஸ்வரா் வீடு, பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகம், பட்டினப்பாக்கம் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் முகாம் அலுவலகம் ஆகியவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இங்கு தினமும் சுமாா் 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். மேலும், முதல்வா் வீடு, கட்சி அலுவலகம் ஆகியவற்றுக்கு வருவோா் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்யப்பட்டு உள்ள அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில் முதல்வரின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், அவரது வீடு, கட்சி அலுவலகம், முகாம் அலுவலகம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்கும்படி சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின் அடிப்படையில் முதல்வா் செல்லும் பகுதிகளான ராஜாஜி சாலை,மெரீனா காமராஜா் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, டிஜிஎஸ் தினகரன், எல்பி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுது நீக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பல புதிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணி ஓரிரு நாள்களில் நிறைவடையும் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.