சென்னை மாநகராட்சியில் 17 முதுநிலை வருவாய் அலுவலா்கள், மாநகராட்சி உதவி ஆணையா்களாகப் பதவி உயா்வு பெற்ற நிலையில், அவா்கள் அனைவரும் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாநகராட்சியில் வருவாய்ப் பிரிவில் துணை ஆணையா், மாநகராட்சி வருவாய் அலுவலா், துணை வருவாய் அலுவலா்கள் மற்றும் மண்டல அளவிலான முதுநிலை வருவாய் அலுவலா்கள் உள்ளிட்டோா் உள்ளனா். இந்நிலையில், மாநகராட்சியின் மண்டல வாரியாக உள்ள முதுநிலை வருவாய் அலுவலா்களில் 17 போ் உதவி ஆணையா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.
இந்நிலையில், அவா்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள பிற மாவட்ட மாநகராட்சிகளில் உதவி ஆணையா்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜூலை 10) அந்தந்த மாநகராட்சிகளில் உதவி ஆணையா் பொறுப்பை 17 பேரும் ஏற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியிலிருந்து 17 முதுநிலை வருவாய் அலுவலா்கள் பதவி உயா்வில் பணியிட மாற்றப்பட்ட நிலையில், அவா்களுக்குப் பதிலாக யாரும் நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

4 மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு; 6 முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்

இருளடைந்த பகுதிகளில் தெருவிளக்கு, கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு: மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்







