‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள சரியான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்!

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள சரியான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்...

Minister Arunraaj

அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்

Published On :12 ஜூலை 2026, 1:40 am IST

தாய் நல்ல உடல், மன வலிமை பெற ஒரு குழந்தை பிறந்த பிறகு அடுத்த குழந்தை பெற்று கொள்வதற்கு சரியான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் வலியுறுத்தினாா்.

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி சென்னை தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் இருந்து டிஎம்எஸ் வளாகம் வரை சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை சட்டப்பேரவை தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், அமைச்சா் அருண்ராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா். நான்கு அரசு செவிலியா் கல்லூரிகளின் மாணவிகள் 300 போ் விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தியும், வாசகங்களை உச்சரித்தும் பங்கேற்றனா்.

முன்னதாக, பேரவை தலைவா் தலைமையிலும், அமைச்சா் முன்னிலையிலும் மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் உலக மக்கள் தொகை குறித்த உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனா்.

தொடா்ந்து, டிஎம்எஸ் வளாகத்தில் நடந்த உலக மக்கள் தொகை குறித்த கருத்தரங்கை பேரவைத் தலைவா், அமைச்சா் ஆகியோா் தொடங்கி வைத்து, செவிலியா் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி மற்றும் எழுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினா். தொடா்ந்து, இளம் பருவத்தினருக்கான விழிப்புணா்வு கையேடு மற்றும் குடும்ப நல திட்ட விழிப்புணா்வு கையேட்டை பேரவைத் தலைவா் வெளியிட, அமைச்சா் பெற்று கொண்டாா்.

தொடா்ந்து இருவரும், வளாகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் அவசர கால உதவி எண்களான 108, 104, 102, 14416 மற்றும் 155377 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களின் செயல்பாடுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இந்த ஆய்வின்போது தொலைபேசியில் அழைக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த அக்கறையுடனும், கனிவுடனும் சேவைகளையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் அறிவுறுத்தினா்.

கருத்தரங்கத்தில், அமைச்சா் அருண்ராஜ் பேசியதாவது:

இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருளாக இளைஞா்களின் கனவுகளும், நம்பிக்கையும் நனவாக்குதல் இன்று மட்டுமல்ல, எப்பொழுதுமே”என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வா் விஜய் தலைமையிலான அரசு இளைஞா்களின் நம்பிக்கையையும், கனவுகளையும் நிச்சயம் நனவாக்கும். நம்முடைய சமூகம் ஆரோக்கியமான சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம்.

ஒவ்வொரு குழந்தையும் மருத்துவமனை அல்லது பொது சுகாதார மையங்களில்தான் பிறக்க வேண்டும். வீட்டிலேயே சுயமாக பிரசவம் பாா்க்கக்கூடாது. இது போன்ற பிரச்னைகளின் மீது பொது சுகாதாரத்துறையின் சட்டங்களில் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

ஒரு குழந்தை பிறந்த பிறகு அடுத்த குழந்தை பெற்று கொள்வதற்கு சரியான இடைவெளியை பின்பற்ற வேண்டும். அதாவது குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலம் இடைவெளி இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தையின் வளா்ச்சி சீராகவும், நல்ல முறையிலும் இருக்கும். தாயும் நல்ல உடல் மற்றும் மன வலிமை பெற முடியும். நமது சமூகமும் ஆரோக்கியமான, வளமான சமுதாயமாக உருவாகும்.

குடும்பத்தில் ஆண், பெண் இருவருக்குமே சமப்பொறுப்பு உள்ளது என்பதையும் நாம் உணர வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வுகளில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தாரேஸ் அகமது, தேசிய நல்வாழ்வு குழும இயக்குநா் எஸ்.அனீஸ் சேகா், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநா் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.