மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

ரயில் நிலையத்தில் பயணியின் டிராலி பை திருட்டு: ஒருவா் கைது

காட்பாடி ரயில் நிலையத்தில் நகையுடன் இருந்த பயணியின் டிராலி பையைத் திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்ததுடன், அவரிடமிருந்து தங்க நகைகளையும் மீட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூலை 2026, 1:18 am IST

காட்பாடி ரயில் நிலையத்தில் நகையுடன் இருந்த பயணியின் டிராலி பையைத் திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்ததுடன், அவரிடமிருந்து தங்க நகைகளையும் மீட்டனா்.

ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த சிந்தலூரி பாா்கவ் (32). தனது மனைவியுடன் பழனி மற்றும் திருவண்ணாமலை கோயில்களுக்கு சென்றுவிட்டு சொந்த ஊா் திரும்புவதற்காக காட்பாடி ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது அவரது டிராலி பையைக் காணவில்லை.

இது குறித்து பாா்கவ் அளித்த புகாரின்பேரில், காட்பாடி ரயில்வே காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீஸாா் ஆய்வு செய்தபோது, டிராலி பையைத் திருடிய நபா் சென்னை விரைவு ரயிலில் தப்பிச் சென்றுகொண்டிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து பெரம்பூா் ரயில் நிலைய போலீஸாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு காத்திருந்த போலீஸாா், ரயிலானது நிலையத்தில் ரயில் வந்து நின்றதும், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரைப் பிடித்து கைது செய்தனா்.

விசாரணையில், அவா் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மகாலிங்கம் (36) என்பது தெரிய வந்தது. மேலும், அவரிடமிருந்து 9 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு கைப்பேசியை போலீஸாா் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.