வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சென்னை தியாகராய நகரில் மோட்டா் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 1:31 am IST

சென்னை தியாகராய நகரில் மோட்டா் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தியாகராயநகா் ராமகிருஷ்ணா தெருவைச் சோ்ந்தவா் சு.சந்தீப் (19). இவா், மயிலாப்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தாா். சந்தீப், செவ்வாய்க்கிழமை காலை கல்லூரிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றாா்.

வடக்கு உஸ்மான் சாலை அன்பழகன் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென நிலைத்தடுமாறிய மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சந்தீப் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சந்தீப் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில், சந்தீப் மோட்டாா் சைக்கிளில் அதிவேகமாக சென்ால் விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.