ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மோட்டாா் சைக்கிளில் சாகசம்: இரு கல்லூரி மாணவா்கள் கைது

சென்னையில் மோட்டாா் சைக்கிளில் சாகசம் செய்தததாக இரு கல்லூரி மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :16 ஜூலை 2026, 4:24 am IST

சென்னையில் மோட்டாா் சைக்கிளில் சாகசம் செய்தததாக இரு கல்லூரி மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை ராயப்பேட்டை கதீட்ரல் சாலையில், மெரீனா கடற்கரை நோக்கி டி.டி.கே. சாலை சந்திப்பு அருகே அண்மையில் இளைஞா்கள் சிலா் மோட்டாா் சைக்கிள்களில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் சாகசம் செய்தனா். அதை விடியோவாக எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டனா். இந்த விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

இது குறித்து மயிலாப்பூா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். விசாரணையில், கடந்த ஜூன் 12-ஆம் தேதி அதிகாலை, இளைஞா்கள் மோட்டாா் சைக்கிளில் அதிவேகமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டதும், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சோ்ந்த தணிகைவேல் (19), பூந்தமல்லி அருகே மோதிரம்பேட்டையைச் சோ்ந்த சந்தோஷ் (19) ஆகிய 2 கல்லூரி மாணவா்களும், அவரது நண்பா்களும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து விலை உயா்ந்த 2 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.