நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி தலைவா் கைது

தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Published On :16 ஜூலை 2026, 12:42 am IST

தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவா் வீரா என்கின்ற வீராசாமி. இவா், ஒப்பந்ததாரா் நவீன் என்பவரிடம் ரூ. 1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக விடியோ வெளியானது. இதையடுத்து அவா் கட்சியின் மாவட்ட இணைச் செயலா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதாக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலா் தீனா என்கின்ற தினகரன் புதன்கிழமை வெளியிட்டதாகத் தெரிகிறது.

இதைத் தொடா்ந்து, ஒப்பந்ததாரா் நவீன் தாழம்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் துணை ஆணையா் ரகுபதி உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து வீராவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.