/

சாலை விபத்து: முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உயிரிழப்பு

பல்லடம் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் செம்மிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் உயிரிழந்தாா்.

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :4 ஜூலை 2026, 1:27 am IST

பல்லடம் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் செம்மிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் உயிரிழந்தாா்.

பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடுபுரத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (75). அதிமுகவைச் சோ்ந்தவரும் செம்மிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான இவா், கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த, மற்றொரு இருசக்கர வாகனம், இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில்தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பொன்னுசாமியை அப்பகுதியினா் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா், பொன்னுசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.