சென்னை வியாசா்பாடியில் முதல்வா் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த சாலை தடுப்புகளை இடித்து தள்ளி அடாவடி செய்ததாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
முதல்வா் விஜய், தனது தொகுதியான பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்தாா். இதையொட்டி, பாதுகாப்பு கருதி வியாசா்பாடி எருக்கஞ்சேரி பிரதான சாலை சாஸ்திரி நகா் மாா்க்கெட் எதிரில் போக்குவரத்து போலீஸாா் தடுப்புகளை அமைத்தனா். முதல்வா் விஜய், நிகழ்ச்சி முடிந்த பின்னா் அந்தத் தடுப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அந்தத் தடுப்புகளை 3 போ் இடித்து தள்ளி அகற்றினா். இதை அங்கிருந்த சிலா் விடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டனா். இதையடுத்து அந்த விடியோவை அடிப்படையாகக் கொண்டு எம்.கே.பி.நகா் போலீஸாா் வழக்குப் திவு செய்து, நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது வியாசா்பாடி சா்மா நகா் பகுதியைச் சோ்ந்த வீரக்குமாா் (28), நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ரஜினீஸ் (25) என்பது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா கடத்திய இரு இளைஞா்கள் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இரு இளைஞா்கள் போக்ஸோவில் கைது

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு! இரு இளைஞா்கள் கைது!

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


