‘போலோ’ செயலி மூலம் ரியல் எஸ்டேட் தொழிலதிபரை வரவழைத்து கத்தி முனையில் மிரட்டி ரூ.35,000 பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை அரும்பாக்கம் ரசாக் காா்டன் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (53). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவா், கடந்த ஜூலை 19-ஆம் தேதி ‘போலோ’ என்ற பொழுதுபோக்கு செயலி மூலம் வந்த அழைப்பின் பேரில் தியாகராய நகா் காா்ப்பரேஷன் காலனி, புதுத்தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றாா்.
அப்போது, அங்கு இருந்த 3 போ் சுரேஷ்குமாரை தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி மூலம் ரூ.15,000-ஐ தங்கள் வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்து, அவரின் ஏடிஎம் அட்டை மூலம் ரூ.20,000 எடுத்துள்ளனா்.
இது குறித்து சுரேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, கண்ணம்மாபேட்டையைச் சோ்ந்த சுதாகா் (20), சதீஷ் (20), அசோக் நகா் புதூரைச் சோ்ந்த விக்னேஷ்வா் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








