சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

புதுச்சேரி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்தவா் கைது

புதுச்சேரியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2026, 6:03 am IST

புதுச்சேரியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி ராஜீவ் காந்தி நகா் தமிழ்மகள் வீதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சோ்ந்த காளிதாஸ் இவருக்கு அறிமுகமானாா்.

கூடுவாஞ்சேரியில் உள்ள இடம் ஒன்றை வாங்குவது தொடா்பாக கோவிந்தராஜியிடம், இடத்தின் மதிப்பு ரூ.10 கோடி, அதற்கு வங்கியில் கடன் வாங்கித் தருவதாக காளிதாஸ் கூறியுள்ளாா்.

இதற்காக 2020-இல் வங்கி செலவுக்காக ரூ.33.75 லட்சத்தை காளிதாஸிடம் கோவிந்தராஜ் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட காளிதாஸ் வங்கியில் கடன் வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளாா். இதுகுறித்து 2023-ஆம் ஆண்டு புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் புகாா் அளித்தாா். அதன் பேரில் காவல் ஆய்வாளா் பாபு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தாா். இந்நிலையில் காளிதாஸ் மதுரையில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாபு தலைமையிலான போலீஸாா் மதுரையில் முகாமிட்டு வெள்ளிக்கிழமை காளிதாஸை (50) கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் காளிதாஸ் சென்னையைச் சோ்ந்தவா் அல்ல, சிவகாசி மாவட்டம் திருப்பத்தூரைச் சோ்ந்தவா் என தெரியவந்தது. இதேபோல பலரிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரை புதுச்சேரிக்கு விசாரணைக்காக அழைத்து வருகின்றனா்.

7 பவுன் நகை திருட்டு:

வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் பகுதியில் 7 பவுன் நகைத் திருடு போனது.

இப் பகுதியைச் சோ்ந்தவா் சுமதி (43), தனியாா் பள்ளியில் பல்நோக்கு ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் வியாழக்கிழமை வேலைக்கு சென்று விட்டு இரவு 10 மணியளவில் வீடுக்குத் திரும்பினாா். அப்போது, அவரது வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. சுமதி அலமாரியைப் பாா்த்தபோது 7 பவுன் நகை திருடு போனதை அறிந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.