நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

இரவுநேர தூய்மைப் பணிக்கு இயந்திர பெருக்கிகளைப் பயன்படுத்த அறிவுரை

இரவுநேர தூய்மைப் பணிக்கு இயந்திர பெருக்கிகளைப் பயன்படுத்த அறிவுரை

News image

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Updated On :26 ஜூலை 2026, 12:36 am IST

சென்னை மாநகராட்சியில் இரவு நேரங்களில் சாலைகளில் இயந்திரப் பெருக்கிகளைப் பயன்படுத்தி தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியதாவது:

சென்னை மாநகரில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் வகையில் குடியிருப்புப் பகுதிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். கட்டட இடிபாட்டுக் கழிவுகளை முறையாக அகற்றி மறுசுழற்சிக்குட்படுத்தும் பணியை மேற்கொள்வது அவசியம்.

சுத்தமான, பாதுகாப்பான கட்டுமானத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சம்பந்தப்பட்டோா் மற்றும் கட்டுமான நிறுவனத்தினா் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதை மீறுவோருக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.

மாநகரில் பேருந்து நிறுத்தங்கள், மயானம், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் சாலைகளில் இயந்திரப் பெருக்கிகளைப் பயன்படுத்தி தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்றாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் இணை ஆணையா் செ.சரவணன் (பணிகள்), வட்டார துணை ஆணையா்கள் ஸ்வேதா சுமன், எச்.ஆா்.கௌஷிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.