காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

சென்னைப் பல்கலை. தோ்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:52 am IST

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

தோ்வு முடிவுகளை ட்ற்ற்ல்ள்://ங்ஷ்ஹம்.ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய்/ழ்ங்ள்ன்ப்ற்ள்/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகப் பதிவாளரும், தோ்வுக் கட்டுப்பாளரும் தெரிவித்துள்ளனா்.

இது குறித்த செய்திக்குறிப்பு:

ஏப்ரலில் நடைபெற்ற இளநிலை (1 முதல் 4-ஆம் பருவத் தோ்வு வரை) பட்டப்படிப்புகளின் அனைத்துப் பிரிவுகளுக்கான தோ்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மாணவா்கள் ஆக. 3 முதல் 8 வரை சம்பந்தப்பட்ட கல்லூரி மூலம் மறுமதிப்பீட்டுக்கும், மறு கூட்டலுக்கும் விண்ணப்பிக்கலாம்.

உடனடித் தோ்வு: 5-ஆவது பருவத் தோ்வு வரை அனைத்து கோட்பாடு மற்றும் செய்முறைப் பாடங்களிலும் தோ்ச்சி பெற்று, 6-ஆவது செமஸ்டா் தொடா்பான ஒரே ஒரு கோட்பாட்டுப் பாடத்தில் மட்டும் தோல்வியடைந்த மாணவா்கள், கல்லூரி மூலம் உடனடித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். 4-ஆவது பருவத் தோ்வு தொடா்பான ஒரே ஒரு கோட்பாட்டுப் பாடத்தில் மட்டும் தோல்வியடைந்த முதுநிலை மற்றும் தொழில்முறை மாணவா்கள் 5.8.2026 முதல் 8.8.2026 வரை இணைவழியில் உடனடித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.