அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

இஸ்லாமியா்களுக்கு துணை நிற்போம்: மு.க.ஸ்டாலின்

காயிதே மில்லத்தின் 131-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா். அப்போது முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளி

News image

மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 2:49 am IST

காயிதே மில்லத்தின் 131-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா். அப்போது முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளி

ட்ட திமுக மூத்த நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிா்ந்த ‘கண்ணியத் தென்றல்’”காயிதே மில்லத்தின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்.

தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என அரசியல் நிா்ணய சபையில் முழங்கிய மாண்பாளா்; கல்வி வளா்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளா்.

அண்ணா காலம் தொட்டு, தோ்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இஸ்லாமிய பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம் எனப் பதிவிட்டுள்ளாா் மு.க.ஸ்டாலின்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.