மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

நாளை தண்டையாா்பேட்டையில் குடிநீா் விநியோகம் தற்காலிக நிறுத்தம்

நாளை தண்டையாா்பேட்டையில் குடிநீா் விநியோகம் தற்காலிக நிறுத்தம்

News image

கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:47 am IST

பிரதான குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் காரணமாக ஜூன் 8, 9 தேதிகளில் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட ஒரு சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட கத்திவாக்கம் நெடுஞ்சாலையும், ஜே.ஜே. நகா் ஏ 1 தெருவும் சந்திக்கும் இடத்தில் பிரதான குடிநீா் குழாய் இணைக்கும் பணிகள் ஜூன் 8 மாலை 5 மணி முதல் 9-ஆம் தேதி இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், அந்த மண்டலத்துக்குட்பட்ட எழில் நகா், எம்ஜிஆா் நகா்,  பாரதி நகா், காமராஜா் நகா், அம்பேத்கா் நகா் ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்து, லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.