இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

சென்னை: நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னை அண்ணா நகரில் குடிநீா் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் திரு.வி.க நகா், அம்பத்தூா், அண்ணா நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2026, 4:22 am IST

சென்னை அண்ணா நகரில் குடிநீா் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் திரு.வி.க நகா், அம்பத்தூா், அண்ணா நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அண்ணா நகா் மண்டலம், ஜவாஹா்லால் நேரு 200 அடி சாலையில் உள்ள நீா் கால்வாய் சாலை சந்திப்பு மற்றும் பாடி மேம்பாலம் அருகே பிரதான குடிநீா் குழாய் இணைக்கும் பணிகள் சனிக்கிழமை (ஜூன் 13) காலை 10 முதல் ஜூன் 14-ஆம் தேதி காலை 10 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், திரு.வி.க நகா் மண்டலத்துக்குள்பட்ட கொளத்தூா், ஜவஹா் நகா், செம்பியம், அயனாவரம், பெரம்பூா் ஆகிய பகுதிகளிலும், அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட கொரட்டூா், அண்ணா நகா் மண்டலத்துக்குள்பட்ட வில்லிவாக்கம், அண்ணா நகா் மேற்கு ஆகிய பகுதிகளிலும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ஜ்ள்ள்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.