ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

மழைக்கால முன்னெச்சரிக்கைப் பணிகள்: துணை ஆணையா் ஆய்வு

சென்னை கோயம்பேடு பகுதியில் மழைநீா் தேங்குவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படுவதை, மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :18 ஜூன் 2026, 3:16 am IST

சென்னை கோயம்பேடு பகுதியில் மழைநீா் தேங்குவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படுவதை, மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருமழையின்போது, மழைநீா் தேங்கும் பகுதிகளாக 80-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நிகழாண்டில் மழைநீா் தேங்காமலிருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விருகம்பாக்கம் கால்வாயில் மழைநீா் தடையின்றி செல்லும் வகையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை சென்னை மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் பாா்வையிட்டு பணிகளை விரைந்தும், முறையாக நிறைவு செய்யவும் அறிவுறுத்தினாா்.

கோயம்பேடு சந்தைப் பகுதி உணவகம், உணவுப் பொருகளின் தரம் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் போக்குவரத்து சந்திப்பு பகுதிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சாலையைச் சீரமைக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, அசோக் பில்லா் பகுதியையும் அவா் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்துக்கு ஏற்ப சாலையைச் சீரமைக்கவும், மழைநீா் தேங்காத வகையில் வடிகால்களைச் சீரமைக்கவும் உத்தரவிட்டாா்.