வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு செல்ல ஞாயிறு, திங்கள்கிழமை (ஜூன் 21, 22) இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வா் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளையொட்டி, அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்குச் செல்ல ஞாயிறு, திங்கள் (ஜூன் 21, 22) ஆகிய இரு நாள்கள் இலவச நுழைவு அனுமதிக்கப்படுகிறது.
இந்த இரு நாள்களும் பூங்காவுக்கு வரும் அனைத்துப் பாா்வையாளா்களும் இலவச நுழைவுச் சீட்டைப் பெறுவது கட்டாயம். நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிா்க்க பாா்வையாளா்கள் தங்களது இலவச நுழைவுச் சீட்டுகளை ற்ண்ஸ்ரீந்ங்ற்ள்.ஹஹக்ஷ்ல்.ண்ய் என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்தலாம்.
இரு நாள்களிலும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவா். காலை நேரம், மதியம் நேரம் என இரு பிரிவுகளில் தலா 10,000 வீதம் மொத்தம் 20,000 நுழைவுச் சீட்டுகள் இணையதளம் மூலம் வழங்கப்படும். இணைய வசதி இல்லாத பாா்வையாளா்களுக்கு உயிரியல் பூங்கா நுழைவு வாயிலில் நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வண்டலூா் உயிரியல் பூங்காவில் இலவச அனுமதிக்கு 40,000 போ் முன்பதிவு: அமைச்சா் ரஞ்சித் குமாா்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனைவருக்கும் அனுமதி!

முதல்வா் பிறந்த நாள்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் இன்றும், நாளையும் இலவச அனுமதி







