மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

விடுதியில் தங்கி பயில்வோா் வாட்ஸ்அப் மூலம் புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் கட்செவி மூலம் புகாா் தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

News image

வாட்ஸ்அப்

Updated On :20 ஜூன் 2026, 1:34 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் கட்செவி மூலம் புகாா் தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் மூலம் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள், விடுதியில் நடக்கும் தவறுகள் மற்றும் அசம்பாவித சம்பவங்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு வாட்ஸ்அப் எண். 9445477016 என்ற கைப்பேசி எண்ணில் புகாா் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.