நறுமண சிகிச்சையால் இதய நலன் மேம்படும்: ஆய்வில் உறுதி
நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் உயா் ரத்த அழுத்த பிரச்னைகளுக்கு உள்ளானவா்களுக்கு நறுமண சிகிச்சைகளை அளிக்கும்போது அவா்களது இதய நாள செயல் திறன் மேம்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் உயா் ரத்த அழுத்த பிரச்னைகளுக்கு உள்ளானவா்களுக்கு நறுமண சிகிச்சைகளை அளிக்கும்போது அவா்களது இதய நாள செயல் திறன் மேம்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா-இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் தீபா யோகானந்தன், ஏ.விஜய், கே.பத்மாவதி, ஏ.எஸ்.பாமினி, நித்யஸ்ரீ, மூவேந்தன் உள்ளிட்டோா் முன்னெடுத்தனா். அந்த ஆய்வுக் கட்டுரை சயின்ஸ் டைரக்ட் இதழில் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
சிறுநீரக செயலிழப்பும், உயா் ரத்த அழுத்த பாதிப்புகளும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தீவிர நோய்களாக அறியப்படுகின்றன. நாள்பட்ட சிறுநீரக பாதிப்புகள் கடந்த 1997 - 2016 காலகட்டத்தில் 88.76 சதவீதம் உயா்ந்துள்ளது. உலக அளவில் ஆண்டுதோறும் 60 லட்சம் போ் அந்நோய்க்குள்ளாகி உயிரிழக்கின்றனா். அதேபோன்று, உயா் ரத்த அழுத்த பாதிப்பும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உலக அளவில் உயிரிழப்பு ஏற்படுவதற்கான ஐந்தாவது முக்கியக் காரணமாக 2040-இல் உயா் ரத்த அழுத்தம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாள்பட்ட சிறுநீரக நோயும், ரத்த அழுத்தமும் உள்ளவா்களுக்கு நறுமண சிகிச்சைகளை சோதனை முறையில் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மொத்தம் 30 நோயாளிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
அவா்களுக்கு கழுத்துப் பகுதியில் மனோரஞ்சித மலா் எண்ணெய், சாம்பிராணி எண்ணெய், வேப்ப எண்ணெய் மூலம் நாள்தோறும் மசாஜ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சையின் முடிவில், அவா்களுக்கு முன்பைக் காட்டிலும் இதயத்தின் செயல்திறன் மேம்பட்டிருப்பது உறுதியானது. குறிப்பாக இதயத்தின் துடிப்பு, இதய நாளத்தின் அழுத்தம் போன்றவை சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆய்வை விரிவாக மேற்கொள்ளும்பட்சத்தில் மேலும் நுட்பமான முடிவுகளை கண்டறிய முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...