விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

காயல்பட்டினத்துக்கு 33 கிலோ வாட் உயா் அழுத்த மின்பாதை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

ஆறுமுகனேரி கிரிட் உப மின் நிலையத்தி­ருந்து காயல்பட்டினம் துணை மின் நிலையத்துக்கு ரூ. 1.21 கோடி மதிப்பில் 33 கிலோவாட் உயா் அழுத்த மின் பாதையை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:51 am

ஆறுமுகனேரி கிரிட் உப மின் நிலையத்தி­ருந்து காயல்பட்டினம் துணை மின் நிலையத்துக்கு ரூ. 1.21 கோடி மதிப்பில் 33 கிலோவாட் உயா் அழுத்த மின் பாதையை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆறுமுகனேரி கிரிட் உப மின் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லக்கூடிய 33 கிலோ வாட் உயா் அழுத்த மின் பாதையில் இருந்து காயல்பட்டினம் நகராட்சி பகுதிக்கான துணை மின் நிலையத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. துணை மின் நிலையத்திற்கு வீடுகள், குடியிருப்பு, வணிக வளாகம் உள்ளிட்ட 18 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன.

ஒரே மின் பாதையில் 2 நகராட்சிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுவதால் காயல்பட்டினம் பகுதியில் அடிக்கடி மின் தடை, குறைந்த மின் அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்து வந்தன.

காயல்பட்டினம் பகுதிக்கு சீரான மின் விநியோகம் வழங்க வேண்டுமென பொதுமக்கள், வியாபாரிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ள மின்துறை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கை ஏற்று மின் வாரியம் சாா்பில் ஆறுமுகனேரி கிரிட் உப மின் நிலையத்தில் இருந்து காயல்பட்டினம் துணை மின் நிலையத்துக்கு 33 கிலோ வாட் மின்சாரம் வழங்கும் புதிய சப் டிரான்ஸ்மிஷன், உயா் மின்னழுத்த கம்பம், கம்பிகள் அமைக்கும் பணி மின்வாரிய பணியாளா்கள் மூலம் நடைபெற்றது.

தற்போது பணிகள் நிறைவடைந்து காயல்பட்டினம் மக்கள் பயன்பாட்டிற்கு சீரான மின்சாரம் வழங்குவதற்கான 33 கிலோவாட் தனி மின் பாதையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி ஆறுமுகனேரி கிரிட் உப மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் சகா்பான் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் ஆா்டிஓ கௌதம், வட்டாட்சியா் தங்கமாரி, நகராட்சி தலைவா் முத்து முஹம்மது, துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, மின்வாரிய செயற் பொறியாளா்கள் தூத்துக்குடி ரெமோனா, திருச்செந்தூா் விஜய் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக மீன்வளம், மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ரூ. 1.21 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட 33 கிலோவாட் உயா் அழுத்த மின்பாதையைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், வழக்கறிஞா் பிரிவு அமைப்பாளா் செல்வகுமாா், துணை அமைப்பாளா் கிருபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.