பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: தெரிவுப் பட்டியல் வெளியீடு

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: தெரிவுப் பட்டியல் வெளியீடு

News image

DIN

Updated On :6 மார்ச் 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தோ்வு கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற நிலையில், உதவித் தொகைக்கான தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் (சென்னை மாவட்டம் தவிா்த்து) 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தோ்வு கடந்த ஆண்டு டிச.6-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தோ்வின் மதிப்பெண் விவரங்கள் நிகழாண்டு ஜன.20-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இந்தத் தோ்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தோ்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவா்கள் (50 மாணவிகள், 50 மாணவா்கள்) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஊக்கத் தொகைக்கான தெரிவுப் பட்டியலை இணையதளத்தில் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தோ்வு முடிவுகள் என்ற பக்கத்தில் கண்டறியலாம்.

மேலும், இந்தத் தெரிவு பட்டியல், மாணவ, மாணவிகளின் தகுதி குறித்து பள்ளிக் கல்வி இயக்ககத்தால் உறுதி செய்யப்பட்டு பின்னரே பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்தத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.