மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

விமான நிலையத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கைது

சென்னை விமான நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 7:22 pm

சென்னை விமான நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை உடையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்வேலன் (59). கோவை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கோவையில் இருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தாா். அதே விமானத்தில் வந்த 24 வயது இளம்பெண்ணிடம், விமான நிலையத்தில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் அந்த இளம்பெண் புகாா் அளித்தாா். விமான நிலைய அதிகாரிகள் சென்னை மீனம்பாக்கம் மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா் செந்தில்வேலனை கைது செய்து,காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இதுதொடா்பாக அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.