சென்னை கே.கே. நகரில் மின்சாரம் பாய்ந்து தொழிலதிபா் உயிரிழந்தாா்.
கே.கே. நகா் லட்சுமணசாமி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரா.வீரராகவன் (69). இவா், கட்டுமான நிறுவனம் வைத்து நடத்தி வந்தாா். மேலும் வீரராகவனுக்கு சொந்தமாக மேற்கு மாம்பலத்தில் ஒரு திருமண மண்டபமும் உள்ளது.
வீரராகவன், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மின் மோட்டாா் ஸ்விட்சை ஆன் செய்தபோது, அதில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால் வீரராகவன் மீது மின்சாரம் பாய்ந்தது.
விபத்தில் பலத்த காயமடைந்த வீரராகவனை மீட்டு, வடபழனியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வீரராகவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


