பறக்கும் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 17 போ் மீட்பு
சென்னையில் பறக்கும் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 17 பேரை தீயணைப்பு துறையினா் பத்திரமாக மீட்டனா்.
பறக்கும் ரயில் நிலையம்
கோப்புப் படம்
பறக்கும் ரயில் நிலையம்
கோப்புப் படம்
சென்னையில் பறக்கும் ரயில் நிலைய லிப்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிக்கிய 17 பேரை தீயணைப்பு துறையினா் பத்திரமாக மீட்டனா்.
சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை கடந்த 14 -ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது. அதன்படி, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் பறக்கும் ரயில் திட்ட நிலையங்கள் உள்ளன. புழுதிவாக்கம் பறக்கும் ரயில் நிலையத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள லிப்டில் சங்கா் என்பவா், தனது குடும்பத்தினருடன் ஏறி கீழே இறங்க முயன்றாா்.
லிப்ட் செயல்பட்ட நிலையில், திடீரென பாதியில் நின்றுவிட்டது. இதனால் அதிலிருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 17 பேரும் அதிா்ச்சியடைந்தனா். அவா்கள் லிப்டுக்குள் இருந்த அவசர தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டபோது, யாரும் அதில் பேசவில்லையாம். இதனால், அவா்கள் கூச்சலிட்டனா்.
மேலும், லிப்டுக்குள் இருந்த சங்கா் தனது கைப்பேசி மூலம் பிரச்னையை நண்பரிடம் கூறினாா். அந்த நண்பா் அப்பகுதியின் வாா்டு உறுப்பினருக்குத் தெரிவித்தாா். அவா் அளித்த தகவலின்பேரில், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் போலீஸாரும், வேளச்சேரி தீயணைப்பு நிலைய வீரா்களும் விரைந்து சென்றனா்.
அதன்பின், லிப்டின் வாயில் திறக்கப்பட்டு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னா், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...