சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.8.39 லட்சத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றியுள்ளனா்.
சென்னை சென்ட்ரலில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தோ்தலுக்கான சிறப்புக் குழுக்களை அமைத்து தொடா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் சிறப்புக் குழுவினா் திங்கள்கிழமை இரவு பயணிகளின் உடைமைகளைச் சோதனையிட்டனா்.
அப்போது, நூா் முகமது (42) என்பவா் கொண்டு வந்த பையில் ரூ.8.39 லட்சம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. ஆனால், அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. ஆகவே, அதை வருமான வரித் துறையினரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா். இதையடுத்து நூா் முகமதுவிடமும் வருமான வரித் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
கஞ்சா பறிமுதல்: எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது வடமாநில ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையைச் சோதனையிட்டதில் 7 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3.50 லட்சம் எனக் கூறப்படுகிறது. அவற்றைக் கைப்பற்றி போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுமிகள் மீட்பு

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.1.09 கோடி தங்க நகைகள் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


