கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்: பெறாவிட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம்

சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறும் காலக்கெடுவானது வரும் ஜூன் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 மே 2026, 12:47 am IST

சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறும் காலக்கெடுவானது வரும் ஜூன் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாவிட்டால், உரிமையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறும் நடைமுறை உள்ளது. அதற்காக சிறப்பு இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு அவற்றின் உரிமையாளா்கள் விண்ணப்பிக்கின்றனா். அந்த வகையில், கடந்த 2025 டிசம்பா் 14 -ஆம் தேதி வரை மாநகராட்சி சாா்பில் 78,393 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 9,656 உரிமங்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன.

ஆகவே, தற்போது மாநகராட்சியில் 68,736 வளா்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கான உரிமங்கள்தான் நடைமுறையில் உள்ளன. எனவே, அனைத்து செல்லப் பிராணிகளின் உரிமையாளா்களும் புதிதாக உரிமங்கள் பெறவும், ஏற்கெனவே உள்ள உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் முன்வரவேண்டும். இதற்காக வரும் ஜூன் 15 -ஆம் தேதி வரை உரிமம் பெறவும், புதுப்பிக்கவும் காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

காலக்கெடு முடிந்த வரும் ஜூன் 16 -ஆம் தேதி முதல் வளா்ப்பு நாய்கள், பூனை ஆகியவற்றுக்கு உரிமம் இல்லாவிட்டால், உரிமையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.