ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சென்னையிலிருந்து இயக்கப்படும் வடமாநில ரயில் பாதைகள் மாற்றம்

சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் வரும் ஜூன் 18 முதல் 21-ஆம் தேதி வரை வழக்கமான பாதையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 2:35 am IST

சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் வரும் ஜூன் 18 முதல் 21-ஆம் தேதி வரை வழக்கமான பாதையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் பணிமனையில் தண்டவாள தொழில்நுட்பப் பணிகள் வரும் 26 முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதன் காரணமாக சில விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன.

சென்னை எழும்பூரில் இருந்து வரும் ஜூன் 19-ஆம் தேதி காலை 6.35 மணிக்குப் புறப்பட்டு மும்பை செல்லும் சிஎஸ்எம்டி விரைவு ரயில் (எண்: 22158) வழக்கமான பாதையில் செல்லாமல், காட்பாடி, பாகலலா திருப்பதி மற்றும் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து ஜூன் 20 மாலை 3.50 மணிக்குப் புறப்பட்டு ஹூப்ளி செல்லும் விரைவு ரயில் (எண்: 17314) வழக்கமான பாதையில் செல்லாமல் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், தா்மாவரம், குண்டக்கல் வழியாகச் செல்லும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஜூன் 20 மாலை 4.35 மணிக்குப் புறப்படவேண்டிய திருப்பதி விரைவு ரயில் (எண்: 16203) செங்கற்பட்டிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும். அந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணத்தில் நிற்காது.

ஜூன் 21 மாலை 4.35 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படவேண்டிய திருப்பதி விரைவு ரயில் (எண்: 16203) திருத்தணியில் இருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு திருப்பதிக்கு செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.