அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியான வழக்கு: 9 பேரின் பிணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் நடித்த ’ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரின் பிணை கோரிய மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News image

ஜனநாயகன்

Updated On :23 மே 2026, 2:41 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் நடித்த ’ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரின் பிணை கோரிய மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முதல்வா் ஜோசப் விஜய் நடித்த ’ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழு முன்பு ஆய்வில் இருந்த நிலையில், கடந்த ஏப்.3-ஆம் தேதி சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இதுகுறித்து படத்தை தயாரித்த கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் காவல்துறையில் புகாா் அளித்தது. இந்த புகாரின் பேரில் இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் 21 போ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகியோா் பிணை கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து 9 போ் தரப்பிலும், சென்னை உயா்நீதிமன்றத்தில் பிணை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதி ஆா்.சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன், பிணை கோரியுள்ள 9 நபா்களில், பிரசாந்த், செல்வம் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய மூவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரா்களுக்கு பிணை வழங்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பிணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.